உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆப்பிள், மைக்ரோ சாப்ட், கூகுள் நிறுவனத்தில் ஸ்டாலின் Mk stalin | tn govt | stalin america tour

ஆப்பிள், மைக்ரோ சாப்ட், கூகுள் நிறுவனத்தில் ஸ்டாலின் Mk stalin | tn govt | stalin america tour

ஆப்பிள், மைக்ரோ சாப்ட், கூகுள் நிறுவனத்தில் ஸ்டாலின் Mk stalin| tn govt| stalin america tour|google தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். காலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள், கூகுள், மைக்ரோ சாப்ட் நிறுவனங்களுக்கு சென்று பார்வையிட்டார். தமிழகத்தில் தொழில் தொடங்குவது தொடர்பாக, அந்நிறுவனங்களில் உயர் அதிகாரிகளிடம் பேசினார். பல்வேறு முதலீடு வாய்ப்புகள், ஒப்பந்தங்கள் தொடர்பாக அவர்கள் விவாதித்தனர். இதில், கூகுள் நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தில் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்களை நிறுவுவதற்கு தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. இது பற்றி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட ஸ்டாலின், வணிக ஒப்பந்தங்களை வலுப்படுத்தி, ஆசியாவின் முதன்மை வளர்ச்சி இயந்திரங்களில் ஒன்றான தமிழகத்தை மாற்ற தீர்மானித்துள்ளாம் என குறிப்பிட்டு உள்ளார். முன்னதாக, அமெரிக்காவில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் நோக்கியா, பேபால், மைக்ரோ சிப் உள்ளிட்ட 6 நிறுவனங்களுடன் 900 கோடிக்கு தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்தது. இதன் மூலம் 4,100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ஆக 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை