உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்க்கும் அரசு இதை அனுமதிப்பது சரியா?

டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்க்கும் அரசு இதை அனுமதிப்பது சரியா?

மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் வரவிட மாட்டோம் என சொல்லும் முதல்வர் ஸ்டாலின், கடலில் காற்றாலை அமைக்கவும், கனிம வளங்கள் எடுப்பதற்கும் அனுமதி கொடுத்தது ஏன்? என்று தேசிய பாரம்பரிய மீனவர்கள் சங்க மாநில தலைவர் சின்னதம்பி கேள்வி கேட்டுள்ளார். டங்ஸ்டன் சுரங்கத்திற்கு ஆரம்பத்தில் அதரவாக செயல்பட்ட தமிழக அரசு, மக்களின் எதிர்ப்பு காரணமாக பின்வாங்கியது. சுரங்கம் செயல்பட விடமாட்டோம் என சொல்லும் முதல்வர் ஸ்டாலின், தமிழக கடலில் கனிமம் தோண்ட அனுமதி வழங்கி இருக்கிறார். திமுக ஆட்சிக்கு வந்த பின், கன்னியாகுமரி முதல் நாகப்பட்டினம் வரை 30 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கடலில் காற்றாலை அமைக்கும் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் சுரங்கம் போன்றவற்றுக்கு அனுமதி தரப்பட்டு உள்ளது.

ஜன 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ