உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஸ்டாலின் தொகுதி ஓட்டு; 20 ஆயிரம் டவுட்டு - கிளம்பிய புது பீதி | Kolathur | Stalin | Anurag Thakur

ஸ்டாலின் தொகுதி ஓட்டு; 20 ஆயிரம் டவுட்டு - கிளம்பிய புது பீதி | Kolathur | Stalin | Anurag Thakur

லோக்சபா தேர்தல் முடிந்து, ஒரு ஆண்டுக்கு மேல் ஆகி விட்ட நிலையில், தேர்தலில் முறைகேடு செய்தது; ஓட்டுத் திருட்டு நடந்துள்ளது என்கிறார் காங்கிரஸ் எம்பி ராகுல். ஆனால் தேர்தலில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என, தேர்தல் கமிஷன் கூறினாலும், தான் சொல்வது தான் உண்மை என்பது போல ராகுல் விடாப்பிடியாக உள்ளார். கர்நாடகாவின் மஹாதேவபுரா சட்டசபை தொகுதியில் முறைகேடு நடந்தது. ஷகும் ராணி என்ற பெண் இரு முறை ஓட்டு போட்டார் என ராகுல் கூறினார். ஆனால் ஷகும் ராணியோ, எனக்கே 70 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. ஒரு இடத்திற்குச் சென்று ஓட்டு போடுவதே கஷ்டம்; இரண்டு இடத்தில் நான் எப்படி ஓட்டு போட முடியும்? என கேள்வி எழுப்பினார். இது ஓட்டுத் திருட்டு குற்றச்சாட்டு கூறிய ராகுலுக்கு சம்மட்டி அடியாக விழுந்தது. அடுத்து இன்னும் அதிர்ச்சியளிக்கும் விதமாக முந்தைய தேர்தல்களின் போது காங்கிரஸ் செய்த தில்லு முல்லு வேலைகளை பாஜ அம்பலப்படுத்தி வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி., ராகுல், பிரியங்கா, அகிலேஷ் யாதவ், அபிஷேக் பானர்ஜி, டிம்பிள் யாதவ் ஆகியோரது தொகுதிகளில், ஆயிரக்கணக்கான போலி வாக்காளர்கள் உள்ளனர். இதனால், இவர்களது வெற்றியிலும் சந்தேகம் எழுந்துள்ளது என பாஜ தலைமை குற்றஞ்சாட்டி உள்ளது. இது குறித்து பா.ஜ மூத்த எம்.பி., அனுராக் தாக்கூர் விளக்கம் அளித்துள்ளார். நாங்கள் மேற்கொண்ட ஆய்வின்படி, பிரியங்காவின் லோக்சபா தொகுதியான கேரளாவின் வயநாட்டில், 93,499 பேர் சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள். இவர்களில் 20,438 பேர் போலி வாக்காளர்கள். 17,450 பேர் போலி முகவரி உள்ளவர்கள். ராகுல் வெற்றி பெற்ற உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி லோக்சபா தொகுதியில், 19,512 பேர் போலி வாக்காளர்கள். 71,977 பேர் போலி முகவரிக்காரர்கள்.

ஆக 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ