உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிவாஜி ஜெயந்தி பேரணிக்கு எதிர்ப்பு: 3 மாநிலங்களில் போலீஸ் படை குவிப்பு Stone pelting incident in Jab

சிவாஜி ஜெயந்தி பேரணிக்கு எதிர்ப்பு: 3 மாநிலங்களில் போலீஸ் படை குவிப்பு Stone pelting incident in Jab

#CommunalViolance| Unrest| ShivajiJayanti| Jabalpru| MP| KarnatakaTension| HyderabadViolance| மபி மாநிலம் ஜபல்பூரில் சிஹோராவில் உள்ள துர்கை அம்மன் கோயில் நேற்று மாலை வழக்கம் போல் வழிபாடு நடந்தது. ரம்ஜான் மாதம் துவங்கியுள்ளதை அடுத்து, அதே பகுதியில் உள்ள மசூதியிலும் அதே நேரம் தொழுகை நடைபெற்றது. அப்போது, துர்கை அம்மன் கோயிலை நோக்கி மர்ம நபர்கள் சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. கோயில் கதவில் கற்கள் பட்டு சத்தம் எழுந்த நிலையில், இரு பிரிவினர் இடையே பலத்த மோதல் ஏற்பட்டது. சற்று நேரத்தில் பதற்றம் அதிகரித்ததால், உடனே அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். நிலைமையை கட்டுக்கொண்டு வர, போலீசார் தடியடி நடத்தினர். மேலும், வன்முறையில் ஈடுபட்ட 20 பேரை கைது செய்தனர். பாதுகாப்பு கருதி, பதற்றத்திற்குள்ளான ஆஜாத் சவுக் பகுதி முழுதும் போலீசார் குவிக்கப்பட்டனர். இன்று காலை வரை அங்கு பதற்றம் தணியாததால், கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பெரிய அளவில் கலவரம் வெடிக்கவில்லை. அதற்கு முன்பாகவே போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர். அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என மாவட்ட கலெக்டர் கூறினார்.

பிப் 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !