உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோவையில் ரேபிஸ் வைரஸ் அவுட் பிரேக்? வெளியான அதிர்ச்சி தகவல் | stray dogs| rabies | rabies outbreak

கோவையில் ரேபிஸ் வைரஸ் அவுட் பிரேக்? வெளியான அதிர்ச்சி தகவல் | stray dogs| rabies | rabies outbreak

ோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் 1 லட்சத்து 11 ஆயிரம் தெருநாய்கள் உள்ளன. தெருநாய்களிடையே ரேபிஸ்ஒழிப்பை செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகம் தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. தெருநாய் ஆபத்து உள்ள 14 பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்கே நோய் பாதித்த 49 நாய்கள் பிடிக்கப்பட்டன. அவற்றில் 4 நாய்களுக்கு ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டிருந்தது. அவை விடுவிக்கப்பட்டன. எஞ்சிய 45 நாய்கள் சீரநாயக்கன்பாளையம் விலங்குகள் பிறப்பு கட்டுப்பாட்டு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. 4 முதல் 10 நாட்களில் அனைத்தும் இறந்துவிட்டன. இறந்த 45 நாய்களின் மூளை திசுக்களை பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 25 நாய்களுக்கு ரேபிஸ் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இப்படி ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் வைரஸ் பாதிப்பு இருப்பதை அவுட் பிரேக் என்கின்றனர். கோவையில் ரேபிஸ் வைரஸ் அவுட் பிரேக் ஏற்படலாம் என்கிற அச்சம் எழுந்துள்ளது. 25 நாய்களுக்கு ரேபிஸ் இருக்கிறது என்பதை தன்னார்வ நிறுவனங்கள் உறுதிபடுத்திய நிலையில், அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவில்லை. நாங்கள் இன்னொரு முறை சோதித்து பார்த்துவிட்டு உறுதி செய்கிறோம் என்கிறது கோவை மாநகராட்சி நிர்வாகம். இந்த நிலையில் ரேபிஸ் பரவலைத் தடுக்க தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஹாட்ஸ்பாட் பகுதிகளில் 4 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள தெரு நாய்கள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மண்டலங்களிலும் அடுத்த ஐந்து மாதங்களில் தடுப்பூசி போடும் பணி முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு தடுப்பூசி வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு வாகனத்திலும் கால்நடை மருத்துவர்கள், நாய் பிடிப்பவர்கள் மற்றும் உதவியாளர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு குழுவும் தினமும் 200 நாய்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரேபிஸ் அறிகுறிகள் உள்ள நாய்கள் பிடிக்கப்பட்டு, சீரானைக்கன்பாளையம் விலங்குகள் பிறப்பு கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. கடந்த 4 மாதங்களில் மாநகராட்சி எல்லைக்குள் 25 ஆயிரம் தெரு நாய்களுக்கு கருத்தடை ஊசி போடப்பட்டுள்ளது. 20 ஆயிரம் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். ரேபிஸ் நோய் விலங்குகளின் உமிழ்நீர் மூலம் பரவுகிறது. இந்த நோய் நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட விலங்குகள் ஆக்ரோஷமாக மாறுகின்றன. சரியான நேரத்தில் சிகிச்சை எடுக்காவிட்டால், இந்த நோய் உயிரிழப்பை ஏற்படுத்தும். பொதுமக்கள் தங்கள் செல்லப்பிராணிகளுக்கு தவறாமல் தடுப்பூசி போட வேண்டும். தெரு நாய்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #Coimbatore #StrayDogs #RabiesOutbreak #RabiesVaccination #CoimbatoreCorporation #PublicHealth #AnimalControl #MissionRabies #HumaneAnimalSociety #VeterinaryCare #DogPopulationControl #HealthEmergency #AnimalWelfare

செப் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !