உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 40 இடங்களில் தையல்: 8 வயது சிறுவனை குதறிய நாய் | Street Dogs | Hosur

40 இடங்களில் தையல்: 8 வயது சிறுவனை குதறிய நாய் | Street Dogs | Hosur

கிருஷ்ணகிரி ஓசூர் அடுத்துள்ள தாசனபுரத்தை சேர்ந்தவர் ஈஸ்வர். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மம்தா, வயது 25. இவர்களது மகன் ராம்சரண் அங்குள்ள அரசு பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கிறார். புதனன்று மாலை நண்பர்களுடன் விளையாட சென்றார். அப்போது அங்கு வந்த நாய் சிறுவர்களை துரத்தி உள்ளது. இதில் ராம்சரண் நாயிடம் சிக்கினார். தலை, முதுகு, காது, மூக்கு, கன்னத்தில் கடித்து குதறி உள்ளது. பலத்த காயங்களுடன் வீட்டுக்குள் ஓடி உயிர் தப்பினான். கூலி வேலை முடிந்து வந்த பெற்றோரிடம் கீழே விழுந்துவிட்டதாக கூறியுள்ளான். இதையடுத்து ஓசூர் அரசு ஆஸ்பிடலுக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்

ஜூலை 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ