மீஞ்சூர் அருகே 6 வயது சிறுவனுக்கு நடந்த சோகம் | Dog | Street Dogs
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே ராமாரெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது 6 வயது மகன் அங்குள்ள பள்ளியில் 2 ஆம் வகுப்பு படிக்கிறார். செவ்வாயன்று காலை பேஸ்ட் வாங்க வீட்டுக்கு அருகில் இருந்த கடைக்கு சிறுவன் சென்றுள்ளான். அப்போது பக்கத்து வீட்டில் வளர்க்கப்படும் 2 நாய்கள் சிறுவனை சுற்றிவளைத்து கடித்து குதறியுள்ளது. சிறுவன் நாய்களிடம் இருந்து தப்ப முயன்ற போதும் விடாமல் துரத்தி தலையில் கடித்துள்ளது.
அக் 09, 2024