உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மாசு இல்லாத சூழலில் எப்படி வாழ வைப்பீர்கள் Stubble burning | Punjab and haryana | govts| Supreme co

மாசு இல்லாத சூழலில் எப்படி வாழ வைப்பீர்கள் Stubble burning | Punjab and haryana | govts| Supreme co

டில்லியில் காற்று மாசு மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளது. இதனால் நுரையீரல் தொடர்பான நோய்கள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பஞ்சாப், ஹரியான மாநிலங்களில் வயல்களில் பயிர் கழிவுகளை எரிப்பதால் புகை உண்டாகி காற்று மாசு ஏற்படுகிறது. பயிர்க் கழிவுகளை எரிப்பதற்கு பதிலாக மாற்று வழியை செய்ய மாநிலங்களுக்கு உத்தரவிட கோரி 2017ல் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. அது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இன்று இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: மாசு இல்லாத சூழலில் வாழ்வது குடிமக்களின் அடிப்படை உரிமை. அது மீறப்படுகிறது என்பதை மத்திய, மாநில அரசுகளுக்கு நினைவுபடுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.

அக் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி