/ தினமலர் டிவி
/ பொது
/ பல்கலைக்கு போன மகள் கர்ப்பமா? அதிர்ச்சியில் கதறிய பெற்றோர் | college student abortion | Chennai
பல்கலைக்கு போன மகள் கர்ப்பமா? அதிர்ச்சியில் கதறிய பெற்றோர் | college student abortion | Chennai
சென்னை வண்டலூர் அடுத்த மேலக்கோட்டையூரில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் உள்ளது. 2005 முதல் செயல்படும் இந்த பல்கலைக்கழகத்தில் விளையாட்டு சம்பந்தமான படிப்புகளை 300 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த ராஜேஷ்குமார்(45) என்பவர் உதவி பேராசியராக 2017 முதல் பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் 3ம்தேதி ராஜேஷ்குமாருக்கு திருமணம் ஆனது. இந்நிலையில், பல்கலைக்கழகத்தில் 2ம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவருடன் ராஜேஷ்குமார் கேளம்பாக்கம் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.
ஏப் 21, 2025