தட்டிகேட்ட அரசு பஸ் டிரைவரை தாக்கிய மாணவர்கள் | Student attack Bus Driver | Poonamallee bus stand
சென்னை, பூந்தமல்லி பஸ் ஸ்டாண்டில் இருந்து தினமும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு ஏராளமான பஸ்கள் இயக்கப்படுகிறது. காலை, மாலை நேரங்களில் அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இங்கு காலியாக நிற்கும் பஸ்களில் காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மாணவிகளுடன் சில்மிஷம் செய்வதாக கூறப்படுகிறது. வியாழனன்றும் வழக்கம் போல் காலியாக இருந்த அரசு பஸ்சில் பள்ளி மாணவர்கள் சிலர் மாணவிகளுடன் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். இதை பார்த்து தட்டி கேட்ட பஸ் டிரைவர் செல்வத்தை பள்ளி மாணவர்கள் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கிவிட்டு ஓடினர். அங்கிருந்த மற்ற கண்டக்டர், டிரைவர்கள் சேர்ந்து அந்த மாணவர்களை மடக்கி பிடித்தனர். டிரைவரை தாக்கிய மாணவன் தப்பி ஓடிய நிலையில், அவனது நண்பர்களை பிடித்து பூந்தமல்லி போலீசில் ஒப்படைத்தனர். தற்போது இந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.