உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மின்வாரிய ஊழியர்கள் அலட்சியம்: மாணவன் மரணம்: மக்கள் ஆவேசம் plus 2 student dies chennai thiruvottiyu

மின்வாரிய ஊழியர்கள் அலட்சியம்: மாணவன் மரணம்: மக்கள் ஆவேசம் plus 2 student dies chennai thiruvottiyu

சென்னை திருவொற்றியூர், தாங்கல், பீர் பயில்வான் தெருவை சேர்ந்தவர் அல்தாப். இவரது மகன் நவ்பில்17 தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்றிரவு டியூசன் முடித்துவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, வீட்டின் வெளியே தேங்கியிருந்த மழைநீரில் ஒரு இடத்தில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. அது தெரியாமல் அங்கு காலை வைத்த நவ்பில் மீது மின்சாரம் பாய்ந்தது. தூக்கி வீசப்பட்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர், நவ்பில் இறந்து விட்டதாக கூறினார் திருவொற்றியூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த இடத்தில் ஏற்கனவே அடிக்கடி மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அப்பகுதி மக்கள் மின் வாரியத்தில் புகார் கூறியுள்ளனர். ஆனால், மின்வாரிய ஊழியர்கள் மின்கசிவை சரிசெய்யாமல் அலட்சியமாக இருந்ததே மாணவனின் பரிதாப மரணத்துக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

ஜூலை 03, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

S.V.Srinivasan
ஜூலை 04, 2025 08:18

மின் துறை மந்திரி என்ன பதில் சொல்லப்போறாரு. மாணவன் இரவில் அந்த பக்கம் வந்து தண்ணீரில் கால் வைத்தது தப்புன்னு சொல்லப்போறாரா?


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ