கல்வராயன் மலையில் தொடரும் அவலம்: பெற்றோர் அதிர்ச்சி | Students carry wood | Kalvarayan hill | Middle
கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் கள்ளச்சாராயம் குடித்து 69-க்கும் மேற்பட்டோர் இறந்தது நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கல்வராயன் மலைப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாக, ஐகோர்ட் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இதன்மூலம் கல்வராயன் மலையில் என்னென்ன அடிப்படை வசதிகள் இருக்கிறது என்பதை ஆராய்ந்து வருகிறது. அங்குள்ள பஸ் வசதி, ஆதார், நியாயவிலைக் கடை, வாக்காளர் அடையாள அட்டை, சாலை வசதி, பள்ளி வசதி மற்றும் அங்குள்ள மக்களின் நிலை குறித்தும் ஒவ்வொரு விசாரணையிலும் தமிழக அரசிடம் கேட்டு வருகிறது. இந்த சூழலில் கல்வராயன் மலைப்பகுதிகளில் உள்ள அரசு மலைவாழ் உண்டு உறைவிட பள்ளி மாணவ, மாணவிகளை பள்ளி நேரத்தில் வேலை வாங்கும் அவலம் தொடர்ந்து வருகிறது. வெள்ளிமலை அருகே உள்ள இன்னாடு கிராமத்தில் இயங்கும் அரசு மலைவாழ் உண்டு உறைவிட தொடக்க பள்ளியில், சமையல் பாத்திரங்களை மாணவிகளே கழுவும் வீடியோ நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.