பள்ளியை திறந்து வைத்து காத்திருந்த கல்வித்துறை அதிகாரிகள் |students who skipped school | Krishnagir
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பர்கூர் அரசு பள்ளியில் 8ம் வகுப்பு மாணவியை மூன்று ஆசிரியர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் புதனன்று வெளிச்சத்துக்கு வந்தது. மாணவி ஒரு மாதமாக பள்ளிக்கு வராதது பற்றி தலைமை ஆசிரியர் மாணவியின் வீட்டுக்கே விசாரிக்க சென்றபோது இந்த உண்மை தெரியவந்தது. இந்த வழக்கில் மூன்று ஆசிரியர்களும் கைதாகி சஸ்பெண்டில் உள்ளனர். விஷயம் தெரிந்து மாணவியின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராடினர். இதனால் விடுமுறை விடப்பட்ட பள்ளி இன்று மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் ஆர்வம் காட்டவில்லை. மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், குழந்தைகள் மன ஆலோசனை குழு, தாசில்தார் மற்றும் பர்கூர் டிஎஸ்பி உள்ளிட்டோர் பள்ளியில் ஆலோசனை நடத்தினர். அதேநேரம் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கிராம மக்கள், பெற்றோர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வராததால் வெறிச்சோடி காணப்பட்டது