லஞ்ச ஒழிப்பு ரெய்டு: தப்பி ஓடிய ஊழியர் sub registrar| Anti-Corruption raid
கோவை, மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு சார் பதிவாளராக இருக்கும் சாந்தி, பத்திரப்பதிவுக்கு லஞ்சம் பெறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக, கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனையிட்டனர். ஒவ்வெரு பிரிவுக்கும் சென்று டேபிள், டிரா உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சல்லடை போட்டனர். விடிய விடிய சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். அத்துடன் சார் பதிவாளர் சாந்தி, டிஜிட்டல் முறையில் லஞ்சம் பெற்றதும் அம்பலமானது. சாந்தியின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டவர்களின் வங்கி கணக்கு மற்றும் UPI செயலி மூலம் லஞ்சப்பண பரிவர்த்தனை நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.