சூடான் ராணுவ மேஜர் ஜெனரலுக்கு குறி? பகீர் பின்னணி | Sudan flight crash | Sudanese military Flight
சூடான் நாட்டில் கடந்த சில வருடங்களாக உள்நாட்டு போர் நிலவி வருகிறது. அந்நாட்டு ராணுவத்துக்கும், RSF என அழைக்கப்படுகின்ற ரேபிட் சப்போர்ட் போர்ஸ் துணை ராணுவ படைக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சூடானின் மேற்கு பகுதி முழுவதும் RSF படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. திங்களன்று நயாலா நகரின் மீது பறந்த ராணுவ விமானத்தை RSF படையினர் சுட்டு வீழ்த்தினர். நாடு முழுவதும் கூட்டுப் பாலியல் வன்கொடுமைகள், திட்டமிட்ட இனப்படுகொலைகள் உள்ளிட்ட போர் குற்றங்கள் நடந்து வருகிறது. சிறைகளை உடைத்து பெண்களை பலாத்காரம் செய்வது, கிராமத்தில் புகுந்து மக்களை சுட்டு வீழ்த்துவது என உச்ச கட்ட கொடூரங்கள் நடக்கிறது. இந்த நிலையில் ஓம்துர்மானில் உள்ள கராரி மாவட்டத்தில் மக்கள் வசிக்கும் பகுதியில் வீடு ஒன்றின் மேல் ராணுவ விமானம் மோதி வெடித்து சிதறியது. விமானத்தில் பயணித்த ராணுவ வீரர்கள் மற்றும் குடியிருப்பு பகுதியில் பொதுமக்கள் உட்பட 46 பேர் இறந்தனர் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். ராணுவ விமானம் ஓம்துர்மான் (Omdurman) நகருக்கு கிழக்கே உள்ள வாடி சாயிட்னா (Wadi Sayidna) ஏர் பேஸில் இருந்து டேக் ஆப் செய்யப்பட்டு வானில் பறந்ததாக கூறப்படுகிறது. புறப்பட்ட சில நொடிகளில் குடியிருப்பு பகுதியின் மேல் விழுந்து விமானம் விபத்துக்குள்ளானது. முதலில் பெரிய வெடிப்பை கண்டோம். விமானம் குடியிருப்பில் விழுந்த பிறகு அடர்த்தியான புகை வந்தது. வீடுகள் இடிந்து காணப்பட்டது என சம்பவத்தை நீரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். இந்த விபத்தில் சூடான் ராணுவ மேஜர் ஜெனரல் பஹர் அகமதுவும் இறந்துள்ளார். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதா, இல்லை விமானம் தாக்குதலுக்கு உள்ளானதா என்பது குறித்து விசாரணை நடக்கிறது.