உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஸ்தம்பித்த சென்னையின் முக்கிய சாலை - காரணம் கேட்டா...| Sudden pothole | GST Road | Bus stuck

ஸ்தம்பித்த சென்னையின் முக்கிய சாலை - காரணம் கேட்டா...| Sudden pothole | GST Road | Bus stuck

சென்னை மீனம்பாக்கத்தில் இருந்து கிண்டி செல்லும் ஜி.எஸ்.டி சாலையின் நடுவே அமைந்துள்ள பாதாள சாக்கடை குழியின் இரும்பு மூடி சேதம் அடைந்து உடையும் நிலையில் இருந்தது. இன்று அந்த வழியாக வந்த எம்டிசி பஸ், மூடி மீது ஏறியபோது திடீரென உடைந்து சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டதில் சக்கரம் பள்ளத்தில் சிக்கிக் கொண்டது. பஸ் ஒரு இன்ச் கூட நகராததால், பயணிகள் அனைவரும் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் இழுவை வாகனம் மூலம் பஸ் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. மீண்டும் வாகனங்கள் பள்ளத்தில் சிக்காமல் இருக்க டிராபிக் போலீசார், பேரிகார்டுகள் அமைத்துள்ளனர்.

ஆக 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ