இண்டி கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஓபன் டாக் Sudershan Reddy|Indi alliance Candidate|Election
துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் என ஒருபோதும் நினைத்து பார்த்தது இல்லை என்று இண்டி கூட்டணி வேட்பாளர் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி கூறினார். தேர்தலில் போட்டியிட வேண்டும் என காங்கிரஸ்தான் முதலில் என்னை அணுகியது. கட்சி வேட்பாளராக இருப்பது எனக்கு கடினமாக இருக்கும் என சொன்னேன். ஆனால், கூட்டணியில் உள்ள கட்சிகள் என்னை ஏற்றுக்கொண்டு வேட்பாளராக அறிவித்தால் போட்டியிடுகிறேன். எந்த ஒரு சித்தாந்தத்தையும் விரும்பவோ அல்லது வெறுக்கவோ எனக்கு எந்த தகுதியும் கிடையாது. ஆனால் ஆர்எஸ்எஸ் செயல்பாடுகள் மீது எனக்கு கடுமையான கருத்து வேறுபாடுகள் உள்ளன. நான் அரசியலமைப்பு மீது நம்பிக்கை கொண்ட ஜனநாயகவாதி. மதச்சார்பின்மை, சமூக நீதி மற்றும் அம்பேத்கரின் சகோதரத்துவ கொள்கைகள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. துணை ஜனாதிபதி தேர்தல் மிகவும் ஒழுக்கமானதாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். சிபி ராதாகிருஷ்ணனுக்கும் எனக்கும் இடையே தனிப்பட்ட முறையில் எதுவும் இல்லை. இந்த போட்டி இரு சித்தாந்தங்களுக்கு இடையிலான போட்டி.. அது நல்ல போட்டியாக இருக்க வேண்டும். தனி நபர்களுக்கு இடையிலான போட்டியாக இருக்க கூடாது என்று முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி கூறினார்.