பூமியை நோக்கிய பயணத்தில் சுனிதா வில்லியம்ஸ் | Sunita williams | Space X |Dragon| NASA Crew-10
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா விஞ்ஞானிகள் சுனிதா வில்லியம்சும், புட்ஸ் வில்மோரும் ஆய்வு பணிக்காக கடந்த ஆண்டு ஜூன் 5ல் சர்வதேச விண்வெளி மையம் புறப்பட்டனர். போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் ராக்கெட்டில் 10 நாள் பயணமாக சென்ற அவர்கள், விண்கலத்தில் ஏற்ட்ட கோளாறால் திட்டமிட்டபடி பூமி திரும்ப முடியவில்லை. சுனிதா, வில்மோர் இல்லாமலேயே கடந்த செப்டம்பரில் ஸ்டார்லைனர் விண்கலம் பூமிக்குத் திரும்பியது. இதையடுத்து இருவரையும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் உதவியுடன் பூமிக்கு அழைத்து வர நாசா முடிவு செய்தது. இந்நிலையில், சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த 9 மாதங்களாக சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ், பட்ச் வில்மோர் ஆகியோரை பூமிக்கு அழைத்து வர ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி நிறுவனத்தின் டிராகன் விண்கலம் சென்றுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து ஃபால்கன்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.