உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போயிங் ராக்கெட்டை நம்பி நொந்த நாசா | Sunita Williams | NASA

போயிங் ராக்கெட்டை நம்பி நொந்த நாசா | Sunita Williams | NASA

எழும்பு கூட உருகி கிட்னி கல் ஆகிடும் விண்வெளியில் சுனிதா நிலை என்ன? அமெரிக்காவை சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனம் போயிங் தயாரித்த ராக்கெட் ஸ்டார்லைனர் இந்த ராக்கெட் மூலம் இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஜூன் 5ல் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். ஜூன் 6ல் தொடங்கி 9 நாட்கள் விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கி இருந்து ஆய்வுகள் நடத்தினர். திரும்பி வருவதற்கான ஏற்பாடுகள் நடந்தபோது விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் பூமி திரும்புவதில் சிக்கல் உண்டானது. திட்டமிட்டபடி எல்லாம் நடந்திருந்தால் ஜூன் 22ல் இருவரும் பூமிக்கு வந்திருக்க வேண்டும். கோளாறை சரி செய்ய முடியாமல் போனதால் பூமிக்கு திரும்புவது ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து 50 நாட்களுக்கு மேல் சுனிதா விண்வெளி நிலையத்தில் தங்கி உள்ளார். அதிக நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்தால் எடையிழப்பு, தசை மற்றும் எலும்பு அடர்த்தி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் நாளடைவில் தசை நார் மற்றும் எலும்புகள் பலவீனமடைந்து உடையும் வாய்ப்பு உள்ளது.

ஆக 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை