அங்க இருக்க இருக்க இவ்ளோ ஆபத்தா? ஷாக் மேல ஷாக் | Sunita Williams | astronauts stuck in space | NASA
மாட்டிக் கொண்ட வீரர்கள் விண்வெளியில் திக்... திக்...! உலுக்கும் உண்மைகள் அமெரிக்காவில் இருந்து விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஜூன் 5ம் தேதி விண்வெளிக்கு புறப்பட்டனர். இதில் சுனிதா வில்லியம்ஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அமெரிக்காவின் கேப் கனவெரல் ஏவுதளத்தில் இருந்து போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் கிளம்பினர். ஜூன் 7ம் தேதி வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தனர். ஜூனம் 13ம் தேதி அங்கிருந்து மீண்டும் பூமிக்கு புறப்பட வேண்டும். ஆனால் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர்கள் பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. அதாவது விண்கலத்தில் 5 முறை ஹீலியம் வாயு கசிவு ஏற்பட்டது. இதை சரி செய்வதற்காக பூமி திரும்பும் பயணம் ஒத்தி வைக்கப்பட்டது. திரும்ப வேண்டிய நாளில் இருந்து இப்போது ஒரு மாதம் ஆகி விட்டது. இன்னும் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் விண்வெளியிலேயே தான் தங்கி இருக்கின்றனர். அவர்கள் இருக்கும் இடம் பூமியில் இருந்து கிட்டத்தட்ட 400 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. பொதுவாக விண்வெளியில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் மனித உடல் பல சவால்களை சந்தித்துக்கொண்டே இருக்கும். அப்படி இருக்க, நிர்ணயித்த காலத்தை விட கூடுதலாக விண்வெளியில் தங்க வேண்டிய நிலை வந்தால், அது மனித உயிருக்கு பேராபத்தை விளைவிக்கும் என்று மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன. விண்வெளியில் மனித உடல் அப்படி என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்ளும் என்பதை பார்க்கலாம். வெண்வெளியில் முதல் அபாயம் சிறுநீரகத்துக்கு தான். ஒவ்வொரு நாளும் சிறுநீரகம் படிப்படியாக பாதிக்கும். விண்வெளியில் ஈர்ப்பு விசை இருக்காது. இதனால் உடலில் இருக்கும் திரவங்கள் மேல்நோக்கி பாயும். உடலின் அனைத்து பகுதியிலும் திரவ சமநிலையை மெயின்டெய்ன் பண்ண முடியாமல் உடல் தவிக்கும். சுத்திகரிப்பு வேலையை சிறுநீரகத்தால் முறையாக செய்ய முடியாது. சிறுநீரகம் பாதிப்படையக்கூடும்.