உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கடன் அடைக்காமல் உரிமம் மாற்ற முடியாது என கண்டிப்பு Supreme court | Verdict | Jet Air ways | Liguida

கடன் அடைக்காமல் உரிமம் மாற்ற முடியாது என கண்டிப்பு Supreme court | Verdict | Jet Air ways | Liguida

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் நரேஷ் கோயல் என்பவரால் 1992ல் தொடங்கப்பட்டு 2016 வரை லாபகரமாக இயங்கியது. 2017-ல் ஏற்பட்ட பெரும் நஷ்டம் காரணமாக அதன் செயல்பாடுகள் குறைய ஆரம்பித்தன. 2019-ல் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தொழில் அதிபர் முராரி லால் ஜலான் மற்றும் லண்டனை சேர்ந்த கால்ராக் கேபிடல் நிறுவனம் ஜேகேசி சேர்ந்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை 2021ல் 350 கோடிக்கு ஏலம் எடுத்தன. ஆனால் ஏலத்தொகையை முழுமையாக செலுத்தவில்லை. அவர்களுக்கு உரிமம் மாற்றி கொடுக்க ஜெட் ஏர்வேஸ் உரிமையாளர் நரேஷ் கோயல் முடிவு செய்தார். அதற்காக தேசிய சட்ட நிறுவன மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் அனுமதி கோரப்பட்டது. கடந்த மார்ச்சில் தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு கடன் கொடுத்த ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி முதலான வங்கிகள் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டன. இந்த வழக்கில், தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு இன்று தீர்ப்பளித்தது. ஜெட் ஏர்வேஸ் வாங்கிய கடன்களை திருப்பி கொடுக்காமல் நிறுவன உரிமையை மாற்ற முடியாது என்பதால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கலைக்கப்படுகிறது. அதைத் தவிர வேறு வழியில்லை.

நவ 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !