உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல உதவிகள் | Supreme Court Judges Manipur Visit| NALSA

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல உதவிகள் | Supreme Court Judges Manipur Visit| NALSA

மணிப்பூரில் 2023ம் ஆண்டு இரண்டு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்தது. தனிநபர், பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. பலர் கொல்லப்பட்டனர். பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். கலவரத்தை ஒடுக்க மாநில போலீசுடன், மத்திய படையும் களம் இறங்கியது. தடியடி, துப்பாக்கி சூடு, கண்ணீர் புகை குண்டு என அனைத்து வகை அஸ்திரங்களையும் பயன்படுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். கலவரம் நிரந்தரமாக ஓய்ந்தபாடில்லை. அவ்வப்போது வெவ்வேறு பகுதிகளில் சண்டைகளும், அதைத் தொடர்ந்த கொலைகள், தனிநபர் தாக்குதல்கள் அரங்கேறின. தொடர் கலவரங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் தொடர் விமர்சனத்தால் முதல்வர் பைரேன் சிங் கடந்த மாதம் பதவி விலகினார். ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது.

மார் 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ