கோயிலுக்குள் செல்ல மறுத்த அதிகாரி பணிநீக்கம்; அதிரடி தீர்ப்பு Supreme court|Samuel kamalesan |Case
இந்திய ராணுவத்தின் குதிரைப் படையில் 2017ம் ஆண்டு சாமுவேல் கமலேசன் என்பவர் இணைந்தார். அவர், அணிவகுப்புக்கான லெப்டினென்ட் அதிகாரி ஆவார். சீக்கியர்கள், ஜாட் மற்றும் ராஜ்புத் வீரர்கள் அடங்கிய மூன்று படைக் குழுக்களை வழிநடத்தும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த படைக் குழுக்களுக்கு வாரந்தோறும் அவரவர் மதப்படி வழிபாடு நடத்துவதற்கான அணிவகுப்பு நடக்கும். ராணுவ விதிப்படி இதற்கு லெப்டினென்ட் அதிகாரியான சாமுவேல் கமலேசன் தலைமை ஏற்க வேண்டும். இவர் கிறிஸ்துவர் என்பதால், வாரந்தோறும் கோயில் மற்றும் குருத்வாராவில் நடக்கும் வழிபாட்டு நிகழ்ச்சியை புறக்கணித்து வந்தார். குறிப்பாக ஆரத்தி, பூஜை உள்ளிட்ட முக்கிய வழிபாடுகள் நடக்கும் சமயங்களில் கோயிலுக்குள் செல்ல மாட்டார். இது ராணுவ உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல் லப்பட்டது. கோயிலுக்கு வெளியே காத்திருக்க நான் தயார் என்றும், ஆரத்தி, அர்ச்சனை போன்ற முக்கிய பூஜை சடங்குகளில் பங்கேற்க விரும்பவில்லை என சாமுவேல் கமலேசன் கூறினார்.