உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு Supreme Court On Jammu Kashmir State

ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு Supreme Court On Jammu Kashmir State

ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்த்து வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் வக்கீல் வாதிடும்போது, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370, 2019ல் நீக்கப்பட்டது. சட்டசபை தேர்தலுக்கு பின் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்தது. 2023ல் தேர்தல் முடிந்த நிலையில் இன்னும் மாநில அந்தஸ்து வழங்கவில்லை என வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பதில் அளித்தார். லடாக் தவிர, ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்த்து விரைவில் வழங்கப்படும் என மத்திய அரசு சொன்னதுதான். தற்போது அங்கு நிலவும் அசாதாரண சூழலையை நீதிபதிகள் நீங்களே அறிவீர்கள். இந்த நிலையில் பல அம்சங்களை கருத்தில் கொண்டே எந்த ஒரு முடிவையும் அரசால் எடுக்க முடியும் என்றார். அப்போது குறிக்கிட்ட மனுதாரர் வக்கீல், மத்திய அரசு அளித்த உத்தரவாதத்தை செயல்படுத்த வேண்டியதும் அவசியம்தான் என்றார். இதைத் கேட்ட தலைமை நீதிபதி கவாய், ஜம்மு காஷ்மீரில் தற்போதைய கள நிலவரத்தை நீங்களும் கருத்தில் கொள்ள வேண்டும். பஹங்காமில் நடந்த சம்பவத்தில் எளிதில் புறந்தள்ளிவிட முடியாது என மனுதாரர் வக்கீலுக்கு சொன்னார். இது தொடர்பாக மத்திய அரசின் விளக்கத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

ஆக 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ