திருச்செந்தூர் கடற்கரையில் களைகட்டிய கந்த சஷ்டி சூரசம்ஹாரம் | Surasamharam | Kandha shashti festival
பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து சூரனை வதம் செய்த முருகன்! மெய்சிலிர்க்கும் காட்சிகள் அசுரன் சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்த நாள் கந்த சஷ்டி திருவிழாவாக ஒவ்வொரு ஆண்டும் முருகன் கோயில்களில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் திருத்தணி தவிர அனைத்து முருகன் தலங்களிலும் நடத்தப்படுகிறது. சூரனை வதம் செய்த இடம் என்பதால் திருச்செந்தூரில் நடக்கும் சூரசம்ஹாரம் முக்கியத்துவம் வாய்ந்தது. சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் காட்சிகள் தத்ரூபமாக நிகழ்த்தி காட்டும் சிறப்புமிக்க சூரசம்ஹார நிகழ்ச்சி திருச்செந்தூரில் கோலாகலமாக நடந்தது. அன்னையிடம் இருந்து பெற்ற சக்தி வேலுடன் அலங்கரித்த சப்பரத்தில், சூரனை வதம் செய்ய போர்க்கோலத்தில் புறப்பட்ட ஜெயந்திநாதர், மாலை 4.30 மணிக்கு கடற்கரையில் எழுந்தருளினார்.