உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கவின் சம்பவத்தில் இதுவரை வெளிவராத பகீர் nellai kavin case | surjith case update | subhashini video

கவின் சம்பவத்தில் இதுவரை வெளிவராத பகீர் nellai kavin case | surjith case update | subhashini video

நெல்லையில் ஐடி ஊழியர் கவின் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மொத்த தமிழகத்தையும் உலுக்கிப்போட்டது. ஜூலை 27ம் தேதி நடந்த இந்த கொடூர சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆணவ கொலை செய்யப்பட்ட சாஃப்ட்வேர் இன்ஜினீயரான கவின், தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர். சித்த மருத்துவரான அவரது காதலி சுபாஷினி, நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகர் பகுதியை சேர்ந்தவர். கவின் ஆதிதிராவிடர் சமூகம். சுபாஷினி மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகம். அக்கா வேறு சமூகத்தை சேர்ந்தவரை காதலிப்பதை தாங்கிக்கொள்ள முடியாத சுபாஷினி தம்பி சுர்ஜித், சம்பவத்தன்று கவினை நேரில் வரவழைத்து வெட்டி கொலை செய்தார். அப்பாவிடம் கல்யாணம் பற்றி பேசலாம் என்று சுர்ஜித் அழைத்ததால், கவினும் நம்பி சென்றார். ஆனால் ஏற்கனவே தான் மிளகாய் பொடி, அரிவாளை பதுக்கி வைத்திருந்த இடத்துக்கு கவினை அழைத்து சென்ற சுர்ஜித், மிகாய் பொடியை தூவி கவினை வெட்டி சாய்த்தார். இந்த கொலை தொடர்பாக சுர்ஜித், எஸ்ஐக்களான அவரது அப்பா சரவணன், அம்மா கிருஷ்ணகுமாரி, உறவினர் ஜெயபால் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கிருஷ்ணகுமாரி தலைமறைவாகி விட்டார். மற்ற 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

செப் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ