உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குமரி இளைஞர் மர்ம மரணம்; என்ன நடந்தது? பரபரப்பு தகவல்கள் | Suspect Dead | Kanyakumari

குமரி இளைஞர் மர்ம மரணம்; என்ன நடந்தது? பரபரப்பு தகவல்கள் | Suspect Dead | Kanyakumari

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகேயுள்ள மாங்கரையை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன் சஜின் வயது 24. ஐடிஐ முடித்தவர். சொந்த ஊரில் கூலி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்து வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சஜின் சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இரவாகியும் வீடு திரும்பாததால் பதற்றம் அடைந்த சஜினின் பெற்றோர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டில் தேடினர். சஜின் கிடைக்கவில்லை மறுநாள் காலை சஜினின் நண்பன் ராபர்ட், சஜின் வீட்டிற்கு வந்தார்.

மார் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை