/ தினமலர் டிவி
/ பொது
/ போலீசை தாக்கிய பாதிரியார்கள்: சாட்சி சொன்ன எஸ்ஐ | Ernakulam-Angamaly | Syro-Malabar Church
போலீசை தாக்கிய பாதிரியார்கள்: சாட்சி சொன்ன எஸ்ஐ | Ernakulam-Angamaly | Syro-Malabar Church
சர்ச் புது ரூல்ஸ் எதிர்த்து போராட்டம் போலீசை தாக்கிய 20 பாதிரியார்கள் கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே அங்கமாலியில் சைரோ மலபார் சர்ச் உள்ளது. இங்குள்ள 23 சர்ச்கள் ஐரோப்பிய நாடான இத்தாலியின் ரோம் நகரில் உள்ள போப்பின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது. சமீபத்தில் அங்கமாலி பகுதியில் உள்ள சர்ச்களில் வழிபாட்டு முறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு சில பாதிரியார்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். சீர்திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக 21 பாதிரியார்கள் அங்கமாலி பேராயர் இல்லத்தின் முன் கடந்த வெள்ளியன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
ஜன 13, 2025