மின்சார ரயில்கள் ரத்தால் பஸ்களில் அலைமோதும் கூட்டம் Chennai Tambaram - Beach Train Cancel
தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 14ம் தேதி வரை சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே காலை 9.20 முதல் மதியம் 1.30 மணி வரையிலும், இரவு 10.30 மணி முதல் அதிகாலை 2.45 மணி வரையும் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில், இன்று முதல் 14ம் தேதி வரை கடற்கரையில் இருந்து பல்லாவரம் வரை, காலை 9.30 முதல் பகல் 12.45 வரை ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படும். அதே போல் இரவு 10.40 முதல் 11.59 வரை ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒரு மின்சார ரயில் இயக்கப்படும் என, ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில்கள் மறு மார்க்கத்தில் பல்லவாரத்தில் இருந்து கடற்கரைக்கு இயக்கப்படும். அந்த வகையில் கடற்கரை - பல்லாவரம் இடையே 18 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால், மாநகர பஸ்களில் கூட்டம் அலைமோதுகிறது.