உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தாம்பரம் ரயில் நிலையத்தில் தொடரும் அசம்பாவித சம்பவங்கள் Tambaram railway station 40 year old wom

தாம்பரம் ரயில் நிலையத்தில் தொடரும் அசம்பாவித சம்பவங்கள் Tambaram railway station 40 year old wom

தாம்பரம் ரயில் நிலையம் அருகே கிழக்கு தாம்பரம் மற்றும் மேற்கு தாம்பரம் பகுதிகளை இணைக்கும் சுரங்கப்பாதை அருகே உள்ள தண்டவாளத்தில் ஒரு ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இரவு சுமார் 9 மணியளவில் இன்ஜின் மீது ஒரு பெண் ஏறினார். ரயிலுக்கு மேலே செல்லும் மின் கம்பியை தொட முயன்றார். இன்ஜின் மீது ஒரு பெண் நிற்பதை கவனித்த ரயில்வே ஊழியர்கள், உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தன்னைச்சுற்றிலும் ஆட்கள் திரண்டு விட்டதை பார்த்ததும் அந்தப் பெண், உயர்நிலை மின்கம்பியை நோக்கி கையை நீட்டியடி, தொட்டு விடுவேன் என மிரட்டிக் கொண்டிருந்தார். இந்த பரபரப்புக்கு மத்தியில், மேல்நிலை மின் கம்பிக்கு போய் கொண்டிருந்த மின்சப்ளையை துண்டித்தனர். அது, 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் செல்லக்கூடிய மின் வழித்தடம். அதில் கைவைத்தால் அவ்வளவுதான். சில நொடிகளில் எரிந்து விடுவார்கள். மின்சப்ளை நிறுத்தப்பட்டதை அடுத்து ரயில்வே போலீசார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அப்பெண்ணை பத்திரமாக கீழே இறக்கினர். பிறகு, தாம்பரம் ரயில்வே போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர் 40 வயது மதிக்கத்தக்க பெண். வட்மாநிலத்தை சேர்ந்தவர். இந்தி பேசுகிறார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எதற்காக தாம்பரம் வந்தார் என எந்த விவரமும் இல்லை. போலீஸ் விசாரணை நடத்த தீவிரமாக முயற்சித்தனர். ஆனால்,அவர் எதற்கும் பதிலளிக்காமல் போலீசாரிடமே திரும்ப திரும்ப கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். அதனால் அவர் மனநலம் பாதிக்கபட்டவராக இருக்கலாம் என்ற முடிவுக்கு ரயில்வே போலீசார் வந்தனர். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு குடும்பத்தினரிடம் சேர்க்கவும் ரயில்வே போலீசார் முடிவு செய்துள்ளனர். கடந்த மாதம் 23ம்தேதி தாம்பரம் ரயில்வே பணிமனை அருகே தண்டவாளத்தில் நின்றிருந்த மின்சார ரயில் இன்ஜினுக்குள் ஒரு இளைஞன் ஏறினான். அவன் ரயிலை இயக்க முயன்றான். அதற்குள் ரயில்வே போலீசார் அவனை மடக்கி பிடி்ததனர். விசாரணையின்போது, அவன் வடமாநிலத்தைச் சேர்ந்தவன் என தெரிந்தது. மது மற்றும் கஞ்சா போதையில் இப்படி செய்ததும் தெரிந்தது. அதனால் போதை தெளிந்ததும் அவனை போலீசார் எச்சரித்து அனுப்பி னர். வழக்கு பதிவு செய்யவில்லை. இப்படியாக, பரந்து விரிந்த தாம்பரம் ரயில் நி லைய பகுதியில் பாதுகாப்பு குளறுபடிகள் தொடர்ந்து நடந்தவண்ணம் உள்ளன. ரயில்வே பாதுகாப்புப்படையினர் மற்றும் ரயில்வே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடாத காரணத்தால்தான் தண்டவாளத்தில் யார் வேண்டுமானாலும் சுதந்திரமாக சுற்றித் திரியலாம் என்ற நிலை உள்ளது. அதனால்தான் இதுபோன்ற பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படுகின்றன; அசம்பாவிதம் நடக்கும் முன் தாம்பரம் ரயில் நிலைய பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணிகளும், சமூக ஆர்வலர்களும் ரயில்வேக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

ஜூலை 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ