உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வைரலான டிரைவிங் வீடியோ; சென்னை போலீஸ் ஆக்சன் | Chennai Police | Tambaram | Viral Video

வைரலான டிரைவிங் வீடியோ; சென்னை போலீஸ் ஆக்சன் | Chennai Police | Tambaram | Viral Video

சென்னை அடுத்த தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் 2 தினங்களுக்கு முன் காரில் சென்ற ஒரு ஜோடி ஊரையே திரும்பி பார்க்க வைத்தது. திடீரென அந்த காரின் சன் ரூபை திறந்து வெளியே வந்த இருவரும் கொஞ்சிக் கொண்டே சென்றனர். அந்த ஆண் நபர், கையில் பீர் பாட்டிலுடன் இருந்தார். இரவில் அத்தனை டிராபிக் இருந்தும் எதையும் கண்டு கொள்ளாமல் அந்த ஜோடி சினிமா பட பாணியில் ஓபனாக மதுவுடன் பயணம் செய்து கொண்டு இருந்தது. இவர்கள் செய்த சேட்டையை சிலர் வீடியோ எடுத்தனர். சோசியல் மீடியாவில் வைரலான இந்த காட்சிகள் போலீசார் கவனத்துக்கு சென்றது. கார் நம்பரை டிராக் செய்து துரைப்பாக்கம் போலீசார் விசாரித்தனர்.

ஆக 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை