உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / செயின் மீண்டும் கிடைத்ததும் எம்பி சுதா சொன்ன சூப்பர் மெசேஜ் Tamil Nadu Congress MP R Sudha

செயின் மீண்டும் கிடைத்ததும் எம்பி சுதா சொன்ன சூப்பர் மெசேஜ் Tamil Nadu Congress MP R Sudha

மயிலாடுதுறை காங்கிரஸ் எம்பி சுதா, டில்லி சாணக்யபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கி பார்லிமென்ட் கூட்டங்களிங் பங்கேற்கிறார். கடந்த 4ம் தேதி காலை 6 மணியளவில் சுதாவும், இன்னொரு தமிழக எம்பியான ராஜாத்தியும் வாக்கிங் சென்றனர். போலந்து நாட்டு தூதரகம் எதிரே நடந்து சென்றபோது, ஸ்கூட்டியில் வந்த ஒரு ஆசாமி மெதுவாக சுதாவின் அருகில் வண்டியை ஓட்டி வந்தான். ெஹல்மெட் போட்டிருந்த அவன், திடீரென சுதாவின் கழுத்தில் இருந்த செயினை அறுத்தான். சுதா போராடியும் முடியவில்லை. நான்கரை சவரன் செயினுடன் திருடன்தப்பிச் சென்று விட்டான். பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்ட நிலையில், எம்பியிடம் நடந்த செயின்பறி்ப்பு நாடு முழுக்க கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ரோந்து போலீசிடம் இதுபற்றி புகார் செய்தபோது போலீஸ் ஸ்டேஷன்ல போய் சொல்லுங்க என சொல்லிவிட்டு அவர் அலட்சியத்துடன்போனதாக சுதா பகீர் குற்றச்சாட்டை சுமத்தினார். இந்த சம்பவம் டில்லி போலீசுக்கு கடுமையான அவப்பெயரை ஏற்படுத்தியது. டில்லியில் ஒரு எம்பிக்கே பாதுகாப்பு இல்லை; மற்ற பெண்களின் நிலை கேள்விக்குறிதான் என மத்திய, மாநில அரசுகளை எதிர்கட்சிகள் விளாச துவங்கின. இதனால் தப்பி ஓடிய திருடனை பிடிக்க டில்லி போலீசார் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். பல தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சம்பவம் நடந்த இடத்தை சுற்றிலுமுள்ள சிசிடிவி கேமராக்களில்பதிவான காட்சிகளை போலீசார் இரவுபகலாக ஆராய்ந்தனர். அதற்கு பலன் கிடைத்தது. இன்று அதிகாலை குற்றவாளியை டில்லி போலீசார் கைதுசெய்தனர். அவன் சோஹன் ராவத் வயது 24 என தெரிய வந்தது. ராவத் பழைய குற்றவாளி. அவன் மீது 26 கிரினமல் வழக்குகள் உள்ளன. பெரும்பாலானவை திருட்டு மற்றும் செயின் பறிப்பு வழக்குகள்தான் என போலீசார் கூறினர். எம்பியின் தங்கச் சங்கிலியை மீட்டு விட்டதாகவும், குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் துணை கமிஷனர் கூறினார். எப்படி பிடித்தீர்கள் என கேட்டபோது போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: எம்பி சுதாவிடம் செயின் பறித்தது சோஹன் ராவத் என்பது தெரிந்ததும் அவனை டிராக் செய்ய ஆரம்பித்தோம். டில்லி முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களை உஷார்படுத்தினோம். எங்கே அவன் சுற்றி திரிகிறான் என்பதை சிசிடிவி மூலம் டிராக் செய்தோம். இன்று அதிகாலை மடக்கிப் பிடித்தோம் என போலீஸ் அதிகாரிகள் கூறினர். கடந்த ஏப்ரல் மாதம் டில்லி அம்பேத்கர் நகரில் வாகன திருட்டு வழக்கில் சோஹன் ராவத் கைது செய்யப்பட்டான். அந்தவழக்கில் கடந்த ஜூன் 27ம்தேதி ஜாமினில் வெளிவந்து, மீண்டும் கைவரிசை காட்டியுள்ளான். எம்பி செயினை பறித்து மாட்டிக் கொண்டான் எனவும் போலீஸ் அதிகாரிகள் கூறினர். டில்லி போலீஸ் துரித கதியில் செயல்பட்டு திருடனை கைது செய்து செயினை மீட்டுக் கொடுத்ததற்காக, எம்பி சுதா நன்றி தெரிவித்தார். எம்பி என்றில்லாமல் சாமான்ய மக்களின் புகார்கள் மீதும் இதுபோல விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என டில்லி போலீசை சுதா வலியுறுத்தினார்.

ஆக 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !