8 ஊரில் ஊற்றும் பேய் மழை-முக்கிய அப்டேட் | tamil nadu heavy rain alert | chennai imd | weather today
இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இப்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று விட்டது. இந்த புயல் சின்னம் வடதமிழகம் நோக்கி நகருவதால், தமிழகம், புதுச்சேரியில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் கூறி உள்ளது. அதன் அறிக்கை: இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். நாளை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்டும், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலுார், அரியலுார் மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலுார், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு கனமழை கொட்டித்தீர்க்கும். இதனால் அந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலுார், பெரம்பலுார், தஞ்சாவூர் மாவட்டங்களில் மிக கனமழையும்; புதுக்கோட்டை, திருச்சி, திருப்பத்துார், வேலுார், தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில், சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இங்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் கூறி உள்ளது. #TamilNaduHeavyRainAlert #ChennaiHeavyRain #IMDRainToday #IMDChennai #ChennaiWeather #TamilNaduWeather #RainAlert #HeavyRain #WeatherUpdate #StormWarning #Monsoon2023 #RainfallPrediction #ChennaiForecast #TamilNaduFlood #ChennaiRainfall #WeatherApp #IMDUpdates #RainyDays #TamilNaduNews #ChennaiStatus