உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழகம், புதுச்சேரியில் 6 நாள் வானிலை நிலவரம் | Tamil Nadu Rain | South Districts Rain

தமிழகம், புதுச்சேரியில் 6 நாள் வானிலை நிலவரம் | Tamil Nadu Rain | South Districts Rain

கடந்த வாரம் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்தது. இந்த நிலையில் அடுத்த 6 நாட்களுக்கான நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதுபோல் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

மார் 02, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி