RSS அணிவகுப்புக்கு அனுமதி மறுப்பது ஏன்?
விஜயதசமியை ஒட்டி தமிழகம் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் சீருடை அணிவகுப்பு நடத்துவது வழக்கம். இந்தாண்டு ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா என்பதால், அக்டோபர் 6ம் தேதி, 58 இடங்களில் அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. அந்தந்த மாவட்ட போலீசிடம் அனுமதிகேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், ஐகோர்ட்டை ஆர்எஸ்எஸ் நாடியுள்ளது. வழக்கு விசாரணையின்போது, மற்ற மாநிலங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்தப்படும் நிலையில், தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல், ஊர்வலத்துக்கான மாற்று தேதி, மாற்று வழி உள்ளிட்ட விவரங்கள் அளிக்கப்படவில்லை. போலீஸ் கேட்கும் விவரங்களைஅளித்தால் அனுமதி அளிப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்றார். இதையடுத்து, போலீஸ் கேட்கும் விவரங்களை அளிக்க மனுதாரருக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.