தமிழகத்தில் எங்கெங்கு மழை பெய்ய வாய்ப்பு TN Rain | Summer | Tamil Nadu Weather
தமிழகம், புதுச்சேரியில் வரும் 26ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என கணிக்கப்பட்டு உள்ளது. 26, 27, 28ம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும். 27ம் தேதி கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 28, 29, 30 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மாலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. #Chennai #TNRain #HeavyRain #MeteorologicalDepartment #RainAlert #TamilNaduWeather #SummerRain #WeatherUpdateTamil #TNRainUpdate