மூடியே கிடக்குது தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம்! | Tamil Development Center | TNgovt | Tirunelveli
திருநெல்வேலியில், தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் நிகழ்சிகள் நடத்த பாளையங்கோட்டை என்ஜிஓ காலனியில் 2000ம் ஆண்டு தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம் கட்டப்பட்டது. 50 சென்ட் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த கட்டடம், தரைத்தளம் முதல் மாடி என மொத்தம் 10,000 சதுரஅடி பரப்பளவைக் கொண்டது. திருநெல்வேலி புது பஸ் ஸ்டாண்டு அருகில் அமைந்துள்ளதால் தமிழ் வளர்ச்சி துறை மட்டுமின்றி, தமிழ் இலக்கிய, பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் ஏற்றதாக இருந்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக இந்த மையம் செயல்பாடின்றி புதர் மண்டி கிடக்கிறது. பண்பாட்டு மையத்தின் தலைவராக மாவட்ட கலெக்டர், செயலாளராக தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குநர் உள்ளனர். இணைச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் போன்ற பலர் நிர்வாகத்தில் இருந்தும், மையம் பயன்பாடு இன்றி மூடியே கிடக்கிறது.