/ தினமலர் டிவி
/ பொது
/ நீர்நிலைகள் நிரம்புவதால் மக்கள் மகிழ்ச்சி! Tamilnadu | Summer Rain | South Districts
நீர்நிலைகள் நிரம்புவதால் மக்கள் மகிழ்ச்சி! Tamilnadu | Summer Rain | South Districts
தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கடந்த இரு தினங்களாக தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ப்ரத் திருப்பூரில் நேற்றிரவு வெளுத்து வாங்கிய கனமழையால் கொங்கு மெயின் ரோடு, பெத்திசெட்டிபுரம், அறிவொளி நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். மாநகராட்சி ஊழியர்கள் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 777.60 மில்லி மீட்டர் மழை பதிவானது.
ஏப் 05, 2025