/ தினமலர் டிவி
/ பொது
/ 10 மாவட்டத்துக்கு கனமழை அலர்ட் விட்ட வானிலை மையம் | tamilnadu 2 days heavy rain
10 மாவட்டத்துக்கு கனமழை அலர்ட் விட்ட வானிலை மையம் | tamilnadu 2 days heavy rain
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலுவிழந்து தெற்கு கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நிலவுகிறது. இதன் காரணமாக, தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக வேளாங்கண்ணியில் 9 செமீ மழை பெய்தது.
ஜன 11, 2026