கோவை போல வேறில்லை ஜி.டி.நாயுடு மகன் சொன்னது Tamilnadu longest flyover| GD Naidu| CM stalin
கோவை, உப்பிலிபாளையம் முதல் நீலாம்பூர் வரையிலான 16 கி.மீ. நீள அவிநாசி சாலை கோவை நகரின் மத்திய ரேகையாக உள்ளது. இந்த சாலையில்தான் முக்கிய பள்ளிகள், கல்லுாரிகள், மருத்துவமனைகள், விமானநிலையம் அமைந்துள்ளன. இதனால் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமிருக்கும். கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அ.தி.மு.க. ஆட்சியில் அவிநாசி சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை உயர்மட்ட பாலம் அமைக்க ரூ.1621 கோடி ஒதுக்கப்பட்டு, 2020 மார்ச் 24ல் நிர்வாக ஒப்புதல் தரப்பட்டது. 2021ல் ஆட்சி மாறியது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., ஆட்சியில், பாலத்தின் கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டு, திட்ட மதிப்பீடு ரூ.1791.23 கோடியாக அதிகரிக்கப்பட்டது. அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், மேம்பாலத்துக்கு, விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் பெயரை முதல்வர் ஸ்டாலின் சூட்டினார்.