உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தீபாவளி திருநாளில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு

தீபாவளி திருநாளில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு

#IMD #RainAlert #ChennaiRain #TamilnaduRainalert #RainUpdate #TNRain #NEMonsoon #DiwaliRain #Deepawali தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய கேரளா பகுதியில் இருந்து தெற்கு உள் கர்நாடகம் வரை ஒரு காற்றழுத்தத் தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக நாளை 7ம் தேதி மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மணிக்கு 40 கிமீ வேகத்தில் காற்று வீசும், இடி, மின்னலுடன் கனமழை பெய்யும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, விருதுநகர், தென்காசி, துாத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் நாளை இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. புதுச்சேரி, காரைக்காலிலும் லேசான மழை பெய்யும். அதே போல், 8ம் தேதி தீபாவளி அன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டின், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும். அதே நாளில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலுார், பெரம்பலுார், சிவகங்கை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் மணிக்கு 40 கிமீ வேகத்தில் காற்றுடன் லேசான மழை பெய்யும். புதுச்சேரியிலும் மழைக்கு வாய்ப்புண்டு. சென்னையில், நாளை மற்றும் நாளை மறுநாள் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 - 31 டிகிரி செல்சியசை ஒட்டி நிலவும். குறைந்த பட்ச வெப்பநிலை 24 - 25 டிகிரி செல்சியசாக இருக்கும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அக்டோபர் 1ம் தேதி முதல் நவம்பர் 6ம் தேதி வரை, தமிழகம் புதுச்சேரியில் பதிவான மழை, சராசரி மழைப்பொழிவை விட 10 சதவீதம் அதிகம் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நவ 06, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !