/ தினமலர் டிவி
/ பொது
/ தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற மாற்றுதிறனாளிகள் கைது! | Multiple Disabilities | Protest
தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற மாற்றுதிறனாளிகள் கைது! | Multiple Disabilities | Protest
தமிழக அனைத்து வகை மாற்றுதிறனாளிகள் சங்கத்தினர், சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயற்சித்தனர். மாற்றுதிறனாளிகளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் 6 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், தங்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற மாற்றுதிறனாளிகளை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளிகளை போலீசார் கைது செய்து சமூக நல கூடத்தில் அடைத்து வைத்தனர்.
ஏப் 22, 2025