நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி துறையில் நடந்த விதிமீறல்
சட்டசபையில் நேற்று இந்திய தணிக்கை துறை தலைவரின், 2023ம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் விபரம்: 35 டெண்டர்களை மாதிரியாக தேர்வு செய்து ஆராய்ந்ததில், குடும்ப உறுப்பினர்களாக உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு, பணிகள் தரப்பட்டிருப்பது தெரிகிறது. சேலம் நீர்வளத்துறை நிலத்தடி நீர் பிரிவு, தேசிய நீரியல் திட்டத்தில் 6 டெண்டர்கள் வெளியிட்டது. விதிமுறைகளை மீறி, குடும்ப உறுப்பினர்களை கொண்ட இரு ஒப்பந்ததாரர்களுக்கே பணிகள் தரப்பட்டுள்ளன. ஒரு டெண்டரில் தந்தை, மகன் பங்கேற்று பணி எடுத்துள்ளனர்.
ஜூன் 30, 2024