உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமைச்சரவையில் மாற்றம் யாருக்கு என்ன இலாக்கா? Tamil Nadu Cabinet Reshuffle|Ponmudi, Senthil Balaji

அமைச்சரவையில் மாற்றம் யாருக்கு என்ன இலாக்கா? Tamil Nadu Cabinet Reshuffle|Ponmudi, Senthil Balaji

2740 அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி அவுட்! மனோ தங்கராஜ் மீண்டும் உள்ளே டிஸ்க்: அமைச்சரவையில் மாற்றம் யாருக்கு என்ன இலாக்கா? Tamil Nadu Cabinet Reshuffle|Ponmudi, Senthil Balaji removed| வனம் மற்றும் காதி துறை அமைச்சர் பொன்முடி, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். அவர்களது ராஜினாமாவை கவர்னர் ஏற்றார். பொன்முடி கவனித்த வனம் மற்றும் காதித்துறை பால் வள அமைச்சர் ராஜகண்ணப்பன் கூடுதலாக கவனிப்பார். போக்குவரத்து அமைச்சர் சிவசங்கரிடம் மின்சார துறை கூடுதலாக ஒப்படைக்கப்படுகிறது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை, வீட்டு வசதி அமைச்சர் முத்துசாமி கூடுதலாக கவனிப்பார். பத்மநாபபுரம் எம்எல்ஏ மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் ஆகிறார். முதல்வர் பரிந்துரைக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். முன்னதாக சொத்துகுவிப்பு வழக்கில் அமைச்சர் பதவியை இழந்த பொன்முடி, சுப்ரீம் கோர்ட் தண்டனையை நிறுத்தி வைத்ததால் மீண்டும் அமைச்சர் ஆனார். சமீபத்தில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் சைவம், வைணவம், பெண்கள் பற்றி படுஆபாசமாக அவர் பேசியது சர்ச்சையானது. இதனால், திமுக துணை பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. அமைச்சர் பதவியையும் பறிக்க வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடந்து வந்தன. கோர்ட்டும் அவரை கண்டித்தது. அவர் மீதுவழக்கு பதிய உத்தரவிட்டது. இச்சூழலில் பொன்முடியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அமைச்சராக இருந்த சொந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை 2023ல்கைது செய்தது. ஓராண்டுக்கு மேலாக சிறையில் இருந்தார். அமைச்சர் பதவியில் இருக்கும் அவர் சாட்சிகளை கலைக்ககூடும் என்பதால் ஜாமீன் தரக்கூடாதுஎன அமலாக்கத்துறை வாதிட்டதால் ஜாமீன் இழுபறியானது. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்திலுக்கு பின்னர் ஜாமீன் கிடைத்தது. வெளியே வந்த உடனே மீண்டும் அமைச்சர் ஆனார். அவரது ஜாமீனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், செந்தில் அமைச்சர் ஆனது பற்றி கேள்வி எழுப்பியது.

ஏப் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை