காலனி என்ற வார்த்தையை பயன்பாட்டிலிருந்து நீக்க உத்தரவு! Caste Name for Street | GO Release | Tamilna
சாலை, தெருக்களுக்கு ஜாதி பெயர் இருக்க கூடாது! சுற்றறிக்கை அனுப்பிய நகராட்சி நிர்வாகம்! தமிழகத்தின் பல ஊர்களில் சாலைகள், தெருக்கள் ஆகியவற்றில் ஜாதி அடிப்படையில் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக தலித் மக்கள் வசிக்கும் பகுதி பொதுவாக காலனி என்ற பெயரிலேயே அடையாளப்படுத்தப்படுகிறது. தமிழக மாநகராட்சியில் 677; நகராட்சியில் 455 என, 1,132 இடங்களில், காலனி மற்றும் ஜாதி பெயர் இடம் பெற்று இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அப்பெயரை நீக்கி அதற்கு மாற்றாக, பூக்கள், மரங்கள், பொதுத்தலைவர்கள், வரலாறு, நிலம் மற்றும் இயற்கை அடிப்படையில் பெயர் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு, அனைத்து மாநகராட்சி, நகராட்சி கமிஷனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: