தம்பியை ஆஸ்பிடலுக்கு கூட்டிச்சென்ற அக்காவுக்கு சோகம் road accident ariyalur 2 dies woman and driver
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை சேர்ந்தவர் விஜயலட்சுமி வயது 55 இவரது தம்பி பாலசுப்பிரமணியன் 46 சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டார். அதற்காக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அட்மிட் செய்யப்பட்டார். சிகிச்சை முடிந்து பாலசுப்பிரமணியனை விஜயலட்சுமி வீட்டுக்கு காரில் ஊருக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். காரை பக்கத்து வீட்டில் வசிக்கும் முரளி (30) ஓட்டினார். கீழப்பழுவூர் அருகே உள்ள சாத்தமங்கலத்தில் கார் வந்தபோது, முன்னால் ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை முந்துவதற்காக, காரை வேகமாக முரளி ஓட்டினார். அப்போது, எதிரே வந்த அரசு பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முரளி, விஜயலட்சுமி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கீழப்பழுவூர் அருகே விபத்து நடந்ததால், மக்கள் ஓடி வந்தனர். இறந்தவர்கள் யார் ? என உடனே தெரிந்து விட்டது. கீழப்பழுவூர் போலீசார் படுகாயம் அடைந்த பாலசுப்ரமணியனை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்கின்றனர். தம்பியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த அக்கா உட்பட 2 பேர் விபத்தில் இறந்த சம்பவம் கீழப்பழுவூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.