எந்தெந்த மாவட்டங்களில் மழை? வானிலை மையம் புது அப்டேட் Tamil Nadu Rain |South Districts Rain
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வரும் நிலையில், நேற்று தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் பகுதி மற்றும் நீலகிரி மாவட்டம் சாந்தி விஜயா பள்ளி பகுதி ஆகியவற்றில் தலா 3 சென்டிமீட்டர் மழை பதிவானது. அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். 19ம்தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.