15 மாவட்டங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை | TN weather update | rain today | tn rain alert today
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் 6 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. டெல்டா, தென்மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை. புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்க்கும். வெள்ளிக்கிழமை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல் தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், சனிக்கிழமை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களிலும் கனமழை கொட்டித்தீர்க்க வாய்ப்புள்ளது. ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் தமிழகம், புதுச்சேரியில் பரவலாக லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.