வடமாநிலத்தவர் பாரபட்சம் பார்ப்பதாக பயிற்சியாளர்கள் பகீர் குற்றச்சாட்டு! Tamilnadu women kabbadi play
இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டி பஞ்சாபில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து அன்னை தெரசா, அழகப்பா, பாரதியார் உள்ளிட்ட பல்கலைகளில் இருந்து, 30க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் சென்றனர். பஞ்சாபின் பதிண்டா மாவட்டத்தில் உள்ள குரு காசி பல்கலையில் நடந்த போட்டியில், தமிழக - பீஹார் அணிகள் மோதின. கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை மற்றும் பீஹாரின் தர்பங்கா பல்கலை மாணவியருக்கு இடையே போட்டி நடந்தது. அப்போது தமிழக வீராங்கனை ஜெயஸ்ரீ ரைடு சென்ற போது, பீஹார் அணியினர் வேண்டுமென்றே மறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. ரைடு சென்ற தமிழக வீராங்கனையும் திருப்பி தாக்கி உள்ளார். தமிழக வீராங்கனைக்கு ஆதரவாக பயிற்சியாளர் மற்றும் வீராங்கனைகள் திரண்டனர். அப்போது எதிரணியினர், பார்வையாளர்கள், நடுவர்கள் உள்ளிட்டோர் சேர்ந்த தமிழக வீராங்கனைகளை தாக்கி உள்ளனர். பிளாஸ்டிக் சேரை வீசியும் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது.