உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டாஸ்மாக் வழக்கு விசாரணைக்கு தடை ஏன்? உத்தரவு முழு விவரம் | Tasmac Case | DMK | Supreme Court | ED

டாஸ்மாக் வழக்கு விசாரணைக்கு தடை ஏன்? உத்தரவு முழு விவரம் | Tasmac Case | DMK | Supreme Court | ED

சென்னையிலுள்ளடாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன் வீடு, மதுபான நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை கடந்த மார்ச் மாதம் 3 நாட்கள் சோதனை நடத்தியது. அப்போது, முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய அமலாக்கத்துறை, ரூ.1000 கோடி ரூபாய்க்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக, அறிக்கை வெளியிட்டது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் புலன் விசாரணையை துவங்கியது. மாநில அரசின் அனுமதி பெறாமல் அமலாக்கத்துறை நடத்திய ரெய்டை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தன.

மே 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !